திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டால் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரி, பூனாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விரக்தி அடைந்த கட்டால் பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று(01-04-2024) திருச்சி- துறையூர் சாலையில் பட்டறை முடக்கு என்ற பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 8-45 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.