தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று (மே 10) தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். இதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.