தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று ( 1- 10- 2023) நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரயில் நிலையங்கள்,
ஆறு, ஏரி, குளம் மற்றும் பொது இடங்களில் தூய்மை பணியில் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் , நடைபெற்ற ‘சிரம்தான்’ நிகழ்ச்சியில் கல்லுக்குழி இரண்டாவது நுழைவாயிலில் பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக ஆர்வலர் சுப்புராமன், ரெயில்வே டி.ஆர்.எம். அன்பழகன் முன்னிலையில் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.
இதில், நூற்றுக்கணக்கான ரெயில்வே பணியாளர்கள் ரயில் நிலைய முன்பகுதி மற்றும் உள்ள இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.