Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினர் மோதல் – அரிவாள் வெட்டு, ரவுடி உள்பட 3 பேர் கைது…!

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.  இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று ஜனவரி 20-ம் தேதி நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருதரப்பினர் ஆட்டம் பாட்டத்துடன் நடனம் ஆடினர். அப்போது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கைகலப்பாக மாறியது .இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொண்டனர்.இதில் சிலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக கதிரவன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக், பிரசன்னா, கமலக்கண்ணன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரசன்னா ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கதிரவன், தீபக் ராகுல், ஹிரோஸ் ஆகிய மூன்று பேர் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தீபக்ராகுல் ரவுடி பட்டியலில் உள்ளார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்