நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 7) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு..க.ஸ்டாலின் பேசுகையில், கட்சியின் நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது, சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மூத்த நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வருகிற 10ம் தேதி வரை சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், நம்மோடு இருந்துவிட்டு வெற்றியும் பெற்று தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.