Rock Fort Times
Online News

அயோத்தி தாசர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை…!

தமிழகத்தில் தீண்டாமை, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெண்ணுரிமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த அரசியல் ஞானி அயோத்திதாச பண்டிதர். 100 ஆண்டுகளுக்கு முன் ‘தமிழன்’ என்ற வார இதழை நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் எனப் போற்றப்பட்ட அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று (மே 20) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வெங்கடராமன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து அவர் பங்கேற்ற முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
***

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்