பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று(09-07-2024) நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Comments are closed.