பெரம்பலூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர் திருச்சி இல.கண்ணன் இல்ல திருமண விழா- மணமக்களை நேரில் வாழ்த்திய அண்ணாமலை…!
பெரம்பலூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர் திருச்சி இல. கண்ணன்- வாசுதேவி தம்பதியின் மகள் இன்ஜினியர் எல்.கே.மங்கையர்கரசிக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த த.சுப்பிரமணியன்- ரேவதி தம்பதியின் மகன் இன்ஜினியர் எஸ்.முத்துக்குமாருக்கும் திருமணம் செய்வதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி ஏ.ஆர்.வி. தனலட்சுமி அரங்கில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், தொழில் அதிபர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், திருச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இல. கண்ணன் இல்லத்துக்கு நேரில் சென்று மணமக்கள் மங்கையர்கரசி- முத்துக்குமார் தம்பதியை வாழ்த்தினார். அப்போது , இல. கண்ணன்-வாசுதேவி மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட, பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.