தமிழக காவல்துறையில் 23 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திருமுருகனுக்கு முதலமைச்சர் பதக்கம்- குடியரசு தினவிழாவில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்…!
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 23 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர் எஸ்.திரு முருகனுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டது. அவருக்கு திருச்சியில் இன்று(26-01-2025) நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், எஸ். திருமுருகனுக்கு முதலமைச்சர் பதக்கம் மற்றும் நற்சான்றிதழை வழங்கி பாராட்டினார். இவர், திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட கண்டோன் மென்ட், பாலக்கரை, அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், உறையூர் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினார். தற்போது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். முதலமைச்சர் பதக்கம் பெற்ற எஸ். திரு திருமுருகனை போலீஸ் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.
Comments are closed.