திருச்சி பழைய பாஸ்போர்ட் ஆபீஸ் பின்புறம் உள்ள நரசிம்மன் நாயுடு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி மெரினா. இவரது மகன் ஆலன் ரெனிஷ் (11). உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஜனவரி 5ம் தேதி இரவு ஆலன் ரெனிஷ் சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு வாந்தி எடுத்துள்ளான். இதனால், தனது மகனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து மாணவனின் தாய் மகேஸ்வரி மெரினா அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் சாப்பிட்டது கெட்டுப் போன சிக்கனா? எந்த கடையில் வாங்கினார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.