Rock Fort Times
Online News

வாக்குப்பதிவு நேரத்துக்கு முன்னதாகவே நடிகர் அஜித்குமார் செலுத்திய வாக்கு செல்லுமா?- தேர்தல் ஆணையம் விசாரணை..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.23) விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ட்ராங் ரூம் உள்ளே வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த வாக்குப்பதிவில் தமிழகத்திலேயே முதல் நபராக நடிகர் அஜித்குமார் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு (காலை 7 மணி) முன்னதாக காலை 6-55 மணிக்கு தன்னுடைய வாக்கினை பதிவு செய்திருந்தார். அதிக கூட்டம் கூடியதால் அஜித்குமார் முன்கூட்டியே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அஜித்குமார் வாக்குப்பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் செலுத்திய வாக்கு செல்லுமா? என்பது தெரியவில்லை இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்