திருச்சி பாலக்கரை எடத்தெரு சன்னதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம்(வயது 75). இவருக்கு திடீரென கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே எதிர்பாராத விதமாக வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் சுரேஷ் பாலக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.