வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் வருகை…* உறவினர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆறுதல்..!
வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் திருச்சியைச் சேர்ந்த லண்டன் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பீமநகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, கிராப்பட்டி, அன்பு நகரை சேர்ந்த அழகுராஜ், திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆகியோர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உடல்களையும் தமிழகம் கொண்டு வர முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பயனாக இன்று(14-07-2026) 10 பேரின் உடல்களும் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து திருச்சியை சேர்ந்த மூன்று பேரின் உடல்கள் உட்பட ஆறு பேர் உடல்கள் கோவை விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியைச் சேர்ந்த மூன்று பேர் உடல்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த உடல்கள் அவரவர் இல்லங்களை வந்தடைந்தன. அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கிராப்பட்டி, அன்பு நகரில் உள்ள இல்லத்திற்கு வந்த அழகுராஜ் உடலுக்கு முன்னாள் அமைச்சரும், மேற்குத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான
கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.