Rock Fort Times
Online News

யார் களவாணி? அதிமுக-த.வெ.க. வார்த்தை மோதல்..!

அண்மையில் கரூரில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், அதிமுகவும் திமுகவும் வேறு வேறு அல்ல இரண்டு கட்சிகளும் கூட்டணி களவாணிகள் தான் என்று பேசினார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று(ஜூலை 14) பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் விஜய் கரூர் நிகழ்ச்சியில் பேசும்போது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டு களவாணிகள் என்று கூறினார். அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடும் முதல் அமைச்சர் விஜய் தான் களவாணி. தமிழகத்தில் 60 நாள் த.வெ.க. ஆட்சியில் செய்தது என்ன? ஒன்றும் செய்யவில்லை. 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய் நாற்காலியின் ஒரு கால் இறவல் கால். வேறு கூட்டணியில் வென்றவர்கள் தான் த.வெ.க.வுக்கு உறுதுணையாக உள்ளனர். தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணி என்பது கட்டுக்கதை. தீயசக்தி தி.மு.க. என்பதுதான் எனது நிலைப்பாடும். தி.மு.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

த.வெ.க.பதிலடி,

இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது கட்சி நடக்கிறதா?கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை. திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது. கொடநாடு கொலைவழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் டிவிகே அரசு பற்றி குறைகூறுவது குபீர் சிரிப்பு, காமெடி. கட்சியே பீஸ் பீஸாகி வருவது தெரியாமல் காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து கட்சியைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும் என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்