திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு உட்பட்ட, பாலக்கரை எடத்தெரு ரோடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எடத்தெரு பகுதியில் அரிசி மண்டி அருகே உள்ள பொதுக் கழிப்பிடத்தில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது .இதையடுத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த வரகனேரியைச் சேர்ந்த சாம்ராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 போதை மாத்திரைகள், 5 சிரஞ்சுகள், வாட்டர் பாட்டில்கள், செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு சிறுவனை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பாலக்கரை பகுதியில் காந்தி மார்க்கெட் தொழிலாளி ஒருவர் போதை மாத்திரை பெற்றதாக பிடிபட்டார் மேலும் நான்கு பேர் தப்பி ஓடி உள்ளனர். இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.