Rock Fort Times
Online News

திருச்சி மேயர் பதவி காங்கிரஸை விட்டு ” கை ” நழுவியது ஏன் ? கட்சியினரிடம் காரணம் கேட்கிறார் செல்வப்பெருந்தகை!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை,முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்
செல்வ பெருந்தகை பேசுகையில் :  மலைக்கோட்டையில் மனது வைத்தால் புனித ஜார்ஜ் கோட்டைக்கு போகலாம். அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்கும் இடம் உங்களிடம் தான் உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்றினால் அதை செய்யலாம். ஒரு கால கட்டத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படும். அந்த பரிணாம வளர்ச்சி காங்கிரஸ் கட்சியிலும் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க திக்குமுக்காடுகிறது. அவர் சிந்தாந்த ரீதியாக, மக்களுக்காக கேள்வி கேட்கிறார். தேசத்தின் குரலாக, தேசத்தின் முகமாக இருக்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்லவில்லை  ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றபின் பாராளுமன்றத்தில் பேசியது எதிர்க்கட்சிகள் கூட விரும்பியுள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒரு சிலர் புதிதாக யாராவது கட்சிக்குள் வந்தால் தங்களின் இடம் பறிபோய் விடுமோ என அஞ்சுகிறார்கள்.

மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக, ராகுல் காந்திதான் பாசிசத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.  கட்சியின் கட்டமைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டால் தான் நமக்கு மரியாதை இருக்கும்.  திருச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் இருந்தார். ஆனால் இன்று மேயர் பதவி நம்மிடம் இல்லை. ஏன் நாம் மேயர் பதவியை பெற முடியவில்லை? எங்கே தவறு இருக்கிறது?  காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திலா?  அல்லது நமது தவறா? என காங்கிரசார் சிந்திக்க வேண்டும்.  எனவே எல்லோரும் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும்  ராகுல் காந்தி எங்கெங்கெல்லாம் நடைபயணம் மேற்கொண்டாரோ அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  அயோத்தி ராமரே ராகுல் பக்கம் தான் இருக்கிறார் கடவுள்கள் ஒருபோதும் ஏமாற்றுக்காரர்கள் பக்கம் இருக்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.  நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்படும்.  எங்கு மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை காங்கிரஸ் கட்சி கையில் எடுக்க வேண்டும்.  அக்டோபர் 2 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கும் நாகப்பட்டினத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதில் ராகுல் காந்தி பங்கேற்பார்.  காங்கிரஸ் கட்சிக்குள் ஏதாவது பிரச்சனைகள் புகார்கள் இருந்தால் என்னை தனிப்பட்ட முறையில் தொண்டர்கள் வந்து சந்திக்கலாம் என தெரிவித்தார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்