நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள 2024-க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(01-02-2024) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, மத்திய அரசு சார்பில் இதுவரை 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிர்மலா சீதாராமனுக்கு 6-வது பட்ஜெட் ஆகும். மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 11- வது பட்ஜெட். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 4-வது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, நிதி அமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.