Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ரத்தினவேல், சீனிவாசன் பேச்சு

பட்டியல் இனமாணவி மீது வன்கொடுமைகளை ஏவி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று(01-02-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியின் குடும்ப கடனை அடைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதிமுகவை ஆரம்பித்து 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தவர். திமுக ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டு காலம் கோட்டை பக்கம் கருணாநிதியால் செல்ல முடியவில்லை. இன்றைக்கு அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆரை, ஆ.ராசா கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இந்த ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த திமுக குடும்ப உறுப்பினர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி முத்துக்குமார், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.எஸ். நஜிமாபாரிக், மாணவரணி நிர்வாகிகள் என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், மீரான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன், அப்பாஸ், இலியாஸ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, வெல்லமண்டி சண்முகம், பூபதி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், அதிமுக வழக்கறிஞர் அணி முல்லை சுரேஷ், முத்துமாரி, ஜெயராமன், கங்கை செல்வன், வரகனேரி சசிகுமார், சுரேஷ் மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ், அப்பாகுட்டி, கே.டி.அன்புரோஸ், சக்கரவர்த்தி, கே.டி.ஏ ஆனந்தராஜ், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், உறையூர் பகுதி சந்திரசேகர், என்ஜினியர் ராஜா, ராஜாளி சேகர், குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், எடத்தெரு பாபு, தென்னூர் ஷாஜகான், ராஜா, கே.பி. ராமநாதன், எடத்தெரு குமார், ஜெயக்குமார், கல்லுக்குழி முருகன், டிபன் கடை கார்த்திகேயன், அக்பர்அலி மற்றும் பொன் அகிலாண்டம், ஈஸ்வரன், காசிபாளையம் சுரேஷ்குமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம்,டைமன் தாமோதரன், ஐ.டி.பிரிவு நாகராஜ், ராஜ்மோகன், செல்லப்பன், வக்கீல் சேதுமாதவன், வண்ணாரப்பேட்டை ராஜன், டி.ஆர்.சுரேஷ் குமார், பீமநகர் சீனிவாசன், ஆரி, பொம்மாசி பாலமுத்து, ஜோசப் ஜெபா,சதீஷ் நாட்டாமை சண்முகம், சிங்கமுத்து, சிந்தை ராமச்சந்திரன்,
வெஸ்லி, மலைக்கோட்டை ஜெகதீசன், மார்க்கெட் பிரகாஷ், ஆண்டாள் தெரு சந்தோஷ்ராஜ், ராமமூர்த்தி, ரமணி லால், வரகனேரி சதீஷ்குமார், தென்னூர் தினகரன், முன்னாள் கவுன்சிலர் நத்தர்சா, வெல்லமண்டி கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் பூபதி நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்