திருச்சி சூரியூரில் 16-ம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு…!
விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில்திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளைகளின் உரிமை யாளர்களுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சூரியூர் பெரிய குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளாக விழாமேடை மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் உடன் இருந்தனர். இந்தஜல்லிக்கட்டு போட்டி திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.