கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (42). நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். அத்துடன் திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றினார். இவரது மனைவி ஜெமீலா. இவர் ,மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேவியர்குமார், வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குத்தந்தை குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. அவரிடம் பேசுவதற்காக சேவியர்குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குத்தந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார். அதன்பேரில், அங்கு வந்த சேவியர் குமாரிடம் பங்குத்தந்தை ராபின்சன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பங்குத்தந்தை தரப்பைச் சேர்ந்த சிலர், சேவியர் குமாரை இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலய வளாகத்தில் குவிந்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நள்ளிரவு 1.45 மணி அளவில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவியர்குமார் மனைவி ஜெமீலா, காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நாங்கள் மயிலோடு ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். வரவு-செலவு தொடர்பாக என் கணவர் கேள்வி எழுப்பினார். இதனால், அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இது தொடர்பாக புகார் அளித்தும் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து என் கணவரைக் கொன்று விட்டனர். என் கணவரை தாக்கிக் கொலை செய்த விவகாரத்தில் மைலோடைச் சேர்ந்த ரமேஷ்பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன், ஜஸ்டஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெலிஸ், பெனிட்டோ மற்றும் மேலும் 2 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன்பேரில், 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், ரமேஷ் பாபு திமுக ஒன்றிய செயலாளராகவும், ராபின்சன், பெனிட்டோ ஆகிய 2 பேரும் பாதிரியாராகவும் உள்ளனர். தலைமறைவாகியுள்ள 15 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படையினர் தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.