Rock Fort Times
Online News

ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலைக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை- ஐகோர்ட் தீர்ப்பு…!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று(22-01-2024) காலை தொடங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேக நிகழ்வுகளை தமிழகத்தில் நேரலை ஒளிபரப்பு செய்ய போலீசார் அனுமதி பெற வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவும், பூஜைகள் செய்யவும் போலீசார் அனுமதி தேவை இல்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை பட்டாபி ராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவும், பூஜைகள் செய்யவும் போலீசார் அனுமதி தேவையில்லை. அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்