10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் தொகுப்புகள் தயாராக உள்ளன- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்…
பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 2023-24 வது கல்வியாண்டு மாதிரி வினாத்தாள், கணிதத் தீர்வு மற்றும் கணித வகைப்படுத்தப்பட்ட வினாத்தாள் தொகுப்புகள், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120க்கும், கணித தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் ரூ.175க்கும், பிளஸ் 2 கணித தீர்வு மற்றும் கணித வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் தலா ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்து பள்ளி வேலை நாட்களில் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, விற்பனை மைய பொறுப்பாளர் ஆசிரியர் பாலுவை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.