Rock Fort Times
Online News

திருச்சி கே.கே.நகரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் புதுப்பொலிவுடன் கோலாகல ஆரம்பம்… * நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 48 கிளைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனம்
இனிப்பு, கார வகைகளை பிரத்தியேகமாக தனி சுவையில் தயாரித்து லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது.

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் பதார்த்தங்கள் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும், முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. திருச்சி கே.கே.நகர் மங்கம்மாள் சாலை எதிரே இயங்கி வந்த அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கிளை, முழுவதும் ஏசி வசதியுடன் விரிவுப்படுத்தப்பட்டு திருச்சி கே.கே நகர், எல்.ஐ.சி காலனியில் பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனர் டாக்டர்.கே.ஆர்.வி.கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆப்பிள் பில்டர்ஸ் செந்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பாரதி ஸ்கூல் தாளாளர் சாத்தனூர் சிவா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஸ்ரீதர், கே.எம்.எஸ் மைதீன், திருச்சி மாவட்ட ஏ.டிஎஸ்.பி மதியழகன், அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வகுமாரி, மேலாண் இயக்குனர் ஜி.அஸ்வின், நிர்வாக இயக்குனர்கள் ரெங்கராஜ், டாக்டர் ஹம்ருத்தா, நிஷா, சிபி, புதுச்சேரி நடராஜன், கண்ணப்பா ஹோட்டல் உரிமையாளர் கண்ணன், காவேரி மோட்டார்ஸ் மணிமாறன், செந்தூர் மெடிக்கல் சுகுமார், அன்னமயம் ஹோட்டல் உரிமையாளர் தம்பு பாலாஜி, பெரம்பலூர் சரவணபவன் ஓனர் அருண், கும்பகோணம் சரவணன், பூலாம்பாடி ஜிகேஆர்
உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் மேலாளர் சூரி, மனித வள மேம்பாட்டு அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்