Rock Fort Times
Online News

அரியமங்கலம் குப்பை கிடங்கு தீ விபத்துக்கான காரணம் என்ன?…! போலீசார் விசாரணை …

திருச்சி அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளது. குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.தற்போது இந்த குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டன. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து 10 நாட்களுக்கு மேல் எரிந்த சம்பவமும் நடந்துள்ளது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே வழக்கம்போல நேற்றும் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இருந்தாலும் முழுமையாக அணைக்க முடியவில்லை. இதன் காரணமாக 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி நீடித்தது. இதனை மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினர். இதற்கிடையே இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கக்கூடும் என தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடந்து வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்