இசைக்கலைஞர்களா நீங்கள் ? இந்திய ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு ! திருச்சி கலெக்டர் வெளியிட்ட அறிக்கை!
இந்திய ராணுவத்தில் இசைக்கலைஞர் பிரிவுக்கான ஆள் சேர்க்கும் முகாம் பெங்களூரில் வருகிற ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் என் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய இராணுவத்தால் அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) தேர்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏர்மேன் தேர்வு மையத்தில் ஜூலை 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விரும்பும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணைய முகவரியில் ஜூன் 5ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஏதேனும் இசைக்கருவி இசைக்க தெரிந்திருத்தல் அவசியம். ஏதேனும் ஒரு இசைக் கருவியில் கிரேடு 5 அல்லது அதற்கு சமமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஹிந்துஸ்தானி அல்லது கர்நாடக இசையில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள், விருதுகள் பெற்றிருக்க வேண்டும். ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்தி ஆன்லைன் முறையில் அனுமதிச் சீட்டு பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.