இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பூத் ஏஜென்ட்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாநில வழக்கறிஞரணி செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் கே. என். அருண்நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி என். தியாகராஜன் எம்எல்ஏ,திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், குளித்தலை மாணிக்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ ராமர், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,திமுக பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா,காஜாமலை விஜய்,நாகராஜன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், தனசேகர், வாமடம் சுரேஷ், கவுன்சிலர்கள் ராமதாஸ்,கலைச்செல்வி,மஞ்சுளா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.