ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று(12-08-2024) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன் (60) என்பவர், தனக்கு சொந்தமான இடத்தினை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை தாசில்தார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த காவல்துறையினர் இதனை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.