தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்- காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன்படி, நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்த படி காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது. காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதால், பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாமக்கல் பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், வரி உயரும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், அதற்கு ஏற்ப வளர்ச்சி தேவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
Comments are closed.