Rock Fort Times
Online News

அம்மா உணவகம் அருகே மயங்கி கிடந்தவர் மரணம்…

திருச்சி உறையூர் சாலை ரோடு அம்மா உணவகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் உறையூர் போலீசார் விரைந்து சென்று மயங்கி கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து மேற்கு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சுல்தான் என்று மட்டும் தெரிந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்