Rock Fort Times
Online News

பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை: புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையம்ரூ. 1200 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (2-1-2024)திறந்து வைக்கிறார். மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார். பிரதமர் திருச்சி வருகையை முன்னிட்டு 01.01.2024 இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும். பேருந்துகள் 02.01.2024 அன்று காலை 7.00 மணி முதல் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்லவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்