Rock Fort Times
Online News

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு-துரை வைகோ போட்டியிட வாய்ப்பு…!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அ.இ.அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணி ஏற்பட்டு, நான்கு முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுக மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி உடன்பாட்டை முடித்துள்ளது. அந்தவகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளான முஸ்லிம் லீக்கிற்கு இராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கி அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் இன்று(18-03-2024) வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியலில் கடந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால், இம்முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு 1 + 1. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்ஜிய சபா சீட்டும் வழங்க திமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. காங்கிரசுக்கு திருச்சி தொகுதி கை நழுவி போனதற்கு காரணம் தற்போதைய திருச்சி சிட்டிங் எம்.பி சு.திருநாவுக்கரசர். இவருக்கு எதிராக தொகுதி முழுவதும் அதிருப்தி அலை வீசுகிறது. சொந்த கட்சிக்காரர்களிடம் கூட திருநாவுக்கரசரால் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. இவருக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஓட்டு கேட்டு சென்றால், பொதுமக்கள் இவரை கல்லால் அடித்து துரத்தும் நிலைகூட உருவாக வாய்ப்புண்டு. 1% வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட திமுக தலைமை திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கி உள்ளதாக காரணம் சொல்லப்படுகிறது. மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ தான் திருச்சி தொகுதி வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. இத்தொகுதியை பொறுத்தவரை மதிமுகவும் கட்சி ரீதியாக வலுவாகவே இருக்கிறது. மருத்துவர் ரொகையா, வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன், மாத்தூர் கலியமூர்த்தி என ஏகப்பட்ட அபார தேர்தல் வேலை செய்யும் தளகர்த்தர்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், இதே திருச்சி தொகுதியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்