தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய பலி தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். அவை நடவடிக்கைக்கு வேண்டுமென்றே இடையூறு செய்யும் அதிமுக எம்எல்ஏ.க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் கே.என்.நேரு தீர்மானம் கொண்டு வந்தார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிமொழிந்தபோது கூட்டத்தொடர் முழுவதும் என்பதில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (25-06- 2024) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க இயலாது.
Comments are closed.