Rock Fort Times
Online News

தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் மரணம்…

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மருமகள் பூர்ணிமா (வயது 30). இந்நிலையில், கடந்த 18ம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயமடைந்தார். அவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(25-01-2024) காலை பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்