திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலை – அமைச்சர் உதயநிதி காணொளி மூலம் திறந்து வைத்தார்…
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஒரு வருடம் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையில் திறப்பு விழா இன்று(25-01-2024) நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி தலைமையில், கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு 3-ன் தலைவருமான மு.மதிவாணன்,முன்னாள் எம்எல்ஏ கேஎன் சேகரன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.