நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி திமுக, அதிமுக, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் அதிமுக ஏற்கனவே
16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று(21-03-2024) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. திருச்சி- கருப்பையா
2. கோவை- சிங்கை ராமச்சந்திரன்
3. பெரம்பலூர்- சந்திரமோகன்
4. மயிலாடுதுறை- பாபு
5. ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்
6. தர்மபுரி- அசோகன்
7. திருப்பூர்- அருணாசலம்
8. நீலகிரி-லோகேஷ
9. வேலூர்- பசுபதி
10. திருவண்ணாமலை- கலியபெருமாள்
11. கள்ளக்குறிச்சி- குமரகுரு
12. சிவகங்கை- சேகர்தாஸ்
13. நெல்லை- சிம்லா முத்துச்சோழன்
14. தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி
15. கன்னியாகுமரி- பசிலியா நசரேத்
16. புதுச்சேரி- தமிழ் வேந்தன்
இதுதவிர காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.