Rock Fort Times
Online News

திருச்சி தில்லைநகரில் துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…!

திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் ஆலடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது .இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இங்கு பூசாரியாக இருந்து வருபவர் ராஜா என்கிற ராஜ்குமார் .இவர் வழக்கம்போல் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பூசாரி ராஜ்குமார், கோவில் டிரஸ்டி பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் டிரஸ்டி பாண்டியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.
பின்னர், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மக்கள் அதிகளவு வசிக்கும் தில்லை நகர் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்