Rock Fort Times
Online News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிர்ச்சி முடிவு…!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை ஒட்டி அந்த தொகுதியில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் திமுக சார்பில் சிவாவும், பாரதிய ஜனதா கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.  ஆனால், அதிமுக வேட்பாளர் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில்  விக்கிரவாண்டி  இடைத்தேர்தலுக்கான, அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.  கூட்டத்தின் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியே தனித்து போட்டியிடும் போது அதிமுக ஒதுங்கியது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்