Rock Fort Times
Online News

பாஜகவில் இணைந்தார் நடிகர் சரத்குமார்- எதிர்ப்பு தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி வெளியேறியதால் பரபரப்பு…!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நடத்தி வந்தவர் நடிகர் சரத்குமார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த சரத்குமார், இந்த முறை திடீரென பாஜக பக்கம் சாய்ந்தார். இந்தநிலையில் அவர் திடீரென தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அண்ணாமலை சால்வை அணிவித்தார். 2007-ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இம்முறை பாஜகவுடன், ச.ம.க கூட்டணி என்று நேற்று வரை கூறி வந்த சரத்குமார், கட்சியையே பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும், பாஜகவில், கட்சியை இணைத்துள்ளேன். நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் பணியில் நாங்கள் தொடர்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவில், சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சி இணைப்பு கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பியபடி நிர்வாகி ஒருவர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்