தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
வண்டலூர் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குநராக பி.சி.தேன்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்றிய வி.அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம்.
சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ்.வனிதா நியமனம்.
சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி.ரமேஷ் பாபு நியமனம்.
சென்னையில் காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே.ஆதிவீரபாண்டியன் நியமனம்.
சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமனம்.
கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமனம்.
காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.
உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.
அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு, திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.
திருச்சி நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர்வு.
மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கரட் கரூனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.