தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், 76-ம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று(26-01-2025) சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர். விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா மாணவி வி.பி.சாத்வீகாவை, ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், கூடுதல் கோட்ட மேலாளர் செல்வன், ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபிஷேக் சிங்வி, ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
Comments are closed.