திருச்சி பெரியகடைவீதி வடக்கு ராணி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 41). இவரது மனைவி வைஷ்ணவி (31). இவர், வெள்ளை வெற்றிலைக்கார தெரு பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கினார்.
ஆனால், அவரால் கடன் தொகையை திருப்பி செலுத்த இயலவில்லை .இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வைஷ்ணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோட்டை போலீசில் கிறிஸ்துராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வைஷ்ணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 939
Comments are closed, but trackbacks and pingbacks are open.