உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தொழிற்பேட்டையில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். மேலும், விபத்து நடந்த போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed.