திருச்சி ஸ்ரீரங்கம் சீனிவாச நகர் நரியன் தெருவை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 42 ). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று எழிலரசன் வீட்டின் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு அங்கு இருந்த காரை சேதப்படுத்தி உள்ளார். இதனை பார்த்த எழிலரசன் அந்த வாலிபரிடம் ஏன் இப்படி செய்கிறாய்? என தட்டி கேட்டுள்ளார்.
இதனால், எழிலரசன் மீது ஆத்திரத்தில் இருந்த அந்த வாலிபர் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை அவரது வீட்டின் மீது தீ வைத்து வீசி உள்ளார். இதில், அந்த வீட்டில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசில் எழிலரசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலரசன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டிலை வீசிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தாளக்குடி பகுதியை சேர்ந்த சோனிபாரதி ( 24) என்பதும், அவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் ரவுடியாக வலம் வந்ததும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
1
of 850
Comments are closed, but trackbacks and pingbacks are open.