இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாளை(19-04-2024)தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் மற்றும் சில தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கின்றன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குப்பதிவு சம்பந்தமான பணிகள் நடக்கின்றன. நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இந்நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஆலந்துறை பா.ஜ.க. மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்களிக்குமாறு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரை பறக்கும் படை அலுவலர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
1
of 850
Comments are closed, but trackbacks and pingbacks are open.