திருச்சி பீமநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 65). பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது காரில் பீம நகரிலிருந்து பாலக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் பிஷப் ஹீபர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ் பிரேக் பிடித்தபோது , பிரேக் குக்கு பதிலாக வேகமாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் சட்டென வேகம் எடுத்த கார் நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் மீது மோதி, சாலையின் இடதுபுறம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டீக்கடை பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் மோதிய வேகத்தில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Prev Post
சொந்த ஊர் செல்ல முண்டியடிப்பு: பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த திருச்சி பஸ், ரயில் நிலையங்கள்…
Next Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.