Rock Fort Times
Online News

திருச்சி அருகே குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் இன்று 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குரங்கை பிடித்து விழுங்க முயன்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பாம்பின் பிடியிலிருந்து குரங்கை மீட்க முயன்றனர். நீண்ட நேரம் போராடியும் முடியாததால் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பின் பிடியிலிருந்து குரங்கை மீட்டனர். ஆனால் அந்த குரங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டது. பின்னர் அந்த மலைப் பாம்பை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று உயிருடன் விட்டனர். உயிரிழந்த குரங்கை குழி தோண்டி புதைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்