108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நாளை மறுதினம் 28 -10 -2023 (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மாலை 05.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு 29/10/23 ம் தேதி ஞாயிற்றுகிழமை வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்படும் என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ. மாாியப்பன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.