சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாளை தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு…* துணைத் தலைவராக தமிழ்நாடு முதல்வர் விஜய் தேர்வு…!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (ஆகஸ்ட் 19) சென்னை வரும் அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். நாளை கோவளத்தில் நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தில் தமிழக பா.ஜ.க தலைவர்களையும் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மாமல்லபுரத்தில் நாளை நடைபெற உள்ள தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டையொட்டி தென்மண்டலக் கவுன்சில் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டலக் குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், துணைத் தலைவராக தமிழக முதல்வர் விஜய்யும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Comments are closed.