திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.90 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…* பெண்ணிடம் தீவிர விசாரணை..!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இருக்கிறது. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சிலர், அவ்வப்போது தங்கம், வெளிநாட்டு பணத்தை எடுத்து வந்து சிக்குவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு செல்லும் விமானப் பயணி ஒருவர், அயல்நாட்டு பண நோட்டுகளை அதிக அளவில் கடத்திச் செல்லவுள்ளதாக நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று (ஆக.17) நள்ளிரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த விமானப் பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணி வைத்திருந்த பையில் ரூ.90.04 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு
பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அவை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
***

Comments are closed.