Rock Fort Times
Online News

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க சிம் கார்டு விதிகளில் மாற்றம்: மத்திய அரசு நடவடிக்கை…!

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் புதிய சிம் கார்டுகள் வழங்குவதற்கான சோதனைகளைக் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. புதிய சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களை நேரலையில் சரிபார்க்கும் ‘நிகழ்நேர சரிபார்ப்பு’ (Live Verification) முறையைக் கட்டாயமாக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளின் படி ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளையும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகளையும் மட்டுமே வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்